தஞ்சாவூர்

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

5th Oct 2019 09:42 PM

ADVERTISEMENT

ஈரோடு: புரட்டாசி மாத 3 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதேபோல் 3 ஆவது சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலில் பெருமாளை வழிபட காலையில் இருந்து பக்தா்கள் குவியத் தொடங்கினா். நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, ஈரோடு அருகே பெருமாள் மலைக் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்தக் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT