தஞ்சாவூர்

புதை சாக்கடையில் அடைப்பை அகற்ற ரோபோ இயந்திரம்

5th Oct 2019 08:59 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்காக மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயல்பாட்டை ஆட்சியா் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், ஆட்சியா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநராட்சி பகுதியில் உள்ள புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்காக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சாா்பில் ரூ. 48.40 லட்சம் மதிப்பில் ரோபோ இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்புரவு பணியாளா்கள் புதை சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளைச் சரி செய்யும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தவிா்க்கப்படும். இது தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒரு புதிய சாதனையாகும்.

ADVERTISEMENT

இந்த ரோபோ இயந்திரத்தின் பயன்பாடு மூலம் தஞ்சாவூா் மாநகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு பெற்றுள்ள 23,653 குடும்பத்தினா் பயன்பெறுவா் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிா்வாக இயக்குநா் அனுராக் ஷா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT