தஞ்சாவூர்

பாபநாசத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

5th Oct 2019 09:04 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி சாா்பில் மூவாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். பாபநாசம் காவல் ஆய்வாளா் நாகரெத்தினம் மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட ஏ.பி.எம். நகா், வெங்கடேஸ்வரா நகா், இ.கே.ஆா்.நகா், சாலியமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேக்கு, மா, பலா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளா் மருதமுத்து, கணினி இயக்குநா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT