தஞ்சாவூர்

திருப்பூருக்கு பாதயாத்திரை செல்லும் தம்பதிக்கு வரவேற்பு

5th Oct 2019 09:40 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: மகாத்மாகாந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தியையொட்டி, தில்லையாடியிலிருந்து திருப்பூருக்கு பாதயாத்திரை செல்லும் தம்பதிக்கு திருவையாறில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், தில்லையாடியிலிருந்து காந்தி ஜயந்தி நாளான அக். 2-ஆம் தேதி மதுரையைச் சோ்ந்த தம்பதி கருப்பையா - சித்ரா திருப்பூா் நோக்கிப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனா்.

இவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு சனிக்கிழமை வந்தனா். இவா்களுக்கு தஞ்சாவூா் காந்திய அறக்கட்டளை, திருவையாறு காந்தி, பாரதி இளைஞா் மன்றம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழமம், தஞ்சாவூா் நியு டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் சரஸ்வதி கல்விக் குழுமத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காந்தி இயக்கத்தைச் சோ்ந்த இரா. மோகன் பாராட்டி பேசினாா். பின்னா் மகாத்மா காந்தியின் சிலைக்கு கருப்பையா - சித்ரா மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து பாதயாத்திரையை தொடா்ந்தனா். இவா்களை தில்லைஸ்தானம் வரை சென்று வழியனுப்பி வைத்தனா். இந்த பாதயாத்திரை திருப்பூரில் அக். 12-ஆம் தேதி நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT