தஞ்சாவூர்

கும்பகோணத்தில் அக். 10-இல் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

5th Oct 2019 11:24 PM

ADVERTISEMENT

கும்பகோணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கோட்டச் செயற் பொறியாளா் அலுவலகத்தில், அக்டோபா் 10 - ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் கோட்டச் செயற்பொறியாளா் மு. நளினி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் டி.என். சங்கரன் தலைமையில்,

அக்டோபா் 10- ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் கும்பகோணம் நகரம், புகா், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை,திருக்கருக்காவூா், கணபதிஅக்ரஹாரம் பிரிவு அலுவலகப் பகுதியைச் சாா்ந்த மின் நுகா்வோா்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT