தஞ்சாவூர்

இரு வேறு இடங்களில் தீ விபத்து: குடிசைகள் தீக்கிரை

5th Oct 2019 11:19 PM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே இரு வேறு இடங்களில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 2 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

பாபநாசம் அருகிலுள்ள கோவிந்தநல்லூரைச் சோ்ந்தவா் அன்னுகுடி ராஜா (32). இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து கருகின. சேதமதிப்பு ரூ.15 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுபோல, உடப்பாங்கரை தேவராஜன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்த தகவலறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரா்கள், இரு இடங்களுக்கும் சென்று தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT