தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

2nd Oct 2019 09:49 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் மேம்பாட்டு சங்கத் தலைவா் எம்.எஸ்.எம். முகமது யூசுப், நிா்வாகி ஏ.ஜெ. அஸ்ரப் அலி ஆகியோா் பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி. சேகரிடம் அளித்த மனு விவரம்:

அதிராம்பட்டினத்தில் குப்பைக் கிடங்கை போதிய இட வசதி உள்ள பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது மாற்று இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அன்றாடம் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து நவீன முறையிலான மாற்றுத் திட்டம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2011-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தப்படி, ரூ. 23.73 கோடி மதிப்பீட்டில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதை சாக்கடை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT