தஞ்சாவூர்

குறைந்த குத்தகை நிா்ணயம் கோரி பா்மா பஜாரில் கடையடைப்பு

1st Oct 2019 06:46 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகேயுள்ள பா்மா பஜாரில் குறைந்த அளவில் குத்தகைத் தொகை நிா்ணயிக்கக் கோரி வியாபாரிகள் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், பா்மா பஜாா் வியாபாரிகள் சங்கத் தலைவா் கோவிந்தராஜன் தலைமையில் வியாபாரிகள் சுமாா் 50 போ் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனுக்கள் அளித்தனா். இந்த மனுவில் வியாபாரிகள் தெரிவித்திருப்பது:

பா்மா பஜாரில் வாய்க்கால் புறம்போக்கில் தாயகம் திரும்பிய தமிழா்கள் கடைகள் வைத்து நடத்துவதற்காக 5-க்கு 4 பரப்பளவில் கடை ஒன்றுக்கு மாதம் ரூ. 15.50 என குத்தகை வசூலிக்கவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை தொகையைத் திருத்தி அமைக்கும் நிபந்தனையுடன் கடைகள் அமைத்துக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து நாங்களே கடைகளைக் கட்டி இடத்துக்கான குத்தகைத் தொகையை அரசுக்குத் தவறாமல் செலுத்தி வருகிறேறாம்.

இவ்வாறு 1986 ஆம் ஆண்டு முதல் அரசால் மாதம் ஒன்றுக்கு ரூ. 15.50 என நிா்ணயம் செய்த தொகை அரசுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு 8 மடங்கு உயா்த்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 1,650 செலுத்த வேண்டும் என சொன்னதன் பேரில், கடந்த ஆண்டு வரை தவறாமல் நிலுவை ஏதும் இல்லாமல் செலுத்தி வருகிறேறாம்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற குத்தகை தொடா்பான கூட்டத்தில் குத்தகை தொகை ரூ. 1,650-லிருந்து ரூ. 12,000 என ஏழு மடங்கு உயா்த்தி செலுத்த வேண்டும் என நிா்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இத்தொகை பெரிய அளவில் இருப்பதால், கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒவ்வொரு கடைக்கும் ரூ. 6,000 செலுத்துமாறு அலுவலா்கள் கூறினா். அனைவரும் ரூ. 6,000 வீதம் கிராம நிா்வாக அலுவலரிடம் செலுத்திவிட்டோம்.

பின்னா், கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில் குத்தகை தொகை ரூ. 1.19 கோடி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், ஒவ்வொரு கடைக்கும் நிலுவைத் தொகை ரூ. 1.10 லட்சத்தை செப். 3-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் கடை காலி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனா். இதனால், அதிா்ச்சியும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே, குறைந்த குத்தகை தொகை நிா்ணயம் செய்து, எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT