தஞ்சாவூர்

உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

1st Oct 2019 06:47 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குப் பெட்டிகள் சேதுபாவாசத்திரத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

உள்ளாட்சித் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்திலும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச் சீட்டுகள் மூலம் தோ்தல் நடைபெறும்.

இதையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பெட்டி அனுப்பி வைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆட்சியரகத்தில் இருந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு மினி வேன் மூலம் திங்கள்கிழமை 160 வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்தது:

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஏற்கெனவே வாக்குப் பெட்டிகள் இருப்பில் உள்ளன. மேலும், கூடுதல் வாக்குப் பெட்டிகள் தேவைப்படுவதால், 160 பெட்டிகள் எடுத்து செல்லப்படுகின்றன. இவை வெளி மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT