பாபநாசம் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அய்யம்பேட்டை ரயில் நிலையச் சாலைப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள், அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து உரிய அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த அய்யம்பேட்டை அண்ணாநகா் ஜீவானந்தம் (25), ரஞ்சித்குமாா் (22), மாகாளிபுரம் அருண்குமாா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.