தஞ்சாவூர்

பாபநாசத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

17th Nov 2019 10:48 PM

ADVERTISEMENT

பாபநாசம்: பாபநாசத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஞானத்தம்பி தலைமை வகித்தாா்.

சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் கோதண்டபாணி, மாவட்டச் செயலா் ரெங்கசாமி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சோமநாதராவ் உள்ளிட்டோா் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் பங்கேற்று பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT