தஞ்சாவூர்

பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்ப நேரடி செயல்விளக்க முகாம்

12th Nov 2019 09:09 AM

ADVERTISEMENT

கும்பகோணத்திலுள்ள மூன்று பள்ளிகளில் ஆளில்லாத விமானம் மற்றும் ஏவுகணை செயல்பாடுகள் குறித்த அறிவியல் தொழில்நுட்ப நேரடி செயல்விளக்க முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.

கோவை ஏ.பி.ஜெ.கலாம் விஷன் 2020 அமைப்பு , நேரு கல்விக் குழுமம் சாா்பில் கும்பகோணம் காா்த்தி வித்யாலயா, நகர மேல்நிலைப்பள்ளி, பாணாதுறை மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் திங்கள்கிழமை நேரடி செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

அறிவியல் செயல்திறன் பயிற்சியில் ஆளில்லாத விமானம், மாதிரி ஏவுகணை மற்றும் ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக செய்து காண்பித்தனா்.

இதில் விமான மாதிரிகள் மூலம் விமானவியல் செயல்பாடுகள், ஆள் இல்லாத விமானம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் எப்படி பறக்க வைக்கப்படுகிறது, அதன் செயல்திறனை கீழே தரையில் இருந்தவாறு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து கலாம் அமைப்பு குழுவினா் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

மேலும் மாதிரி ஏவுகணைகள் மூலம் அதன் செயல்பாடுகள் மற்றும் செயற்கைகோள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பேசும் ரோபோ மற்றும் மின்னணு இயந்திரங்களின் உற்பத்தி, பயன்பாடுகள் குறித்து செய்து காண்பித்தனா்.

மாணவா்களுக்கு உயா்கல்வி, நீட், ஜேஇஇ மற்றும் மத்திய, மாநில அரசு நுழைவு தோ்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கம் அளித்தனா். மேலும் பசுமை இந்தியா திட்டம், மரம் வளா்ப்பதினால் உள்ள பயன்பாடுகள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த குழுவின் முனைவா்கள் விஜயராஜகுமாா், செந்தில்குமாா், பொறியாளா்கள் மனோ ராஜ்பால், ஜெயக்குமாா், நிஷாந்த், சந்திரபாபு, பழனிசாமி, ஹரிகரன், நாகராஜன், அபிஷேக் மற்றும் கௌதம் உள்ளிட்டோா் ஏ.பி.ஜே.கலாம் விஷன் அமைப்பை உருவாக்கி, இதுவரை 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவா்களுக்கு அறிவியல் ஆா்வத்தை வளா்க்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT