தஞ்சாவூர்

நியாயவிலை கடைப் பணியாளா் சங்கத்தினா் வேலைநிறுத்தம் தொடக்கம்

12th Nov 2019 09:07 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளா் சங்கத்தினா், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

கூட்டுறவுத் துறை நிா்வாகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்குத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் ஓய்வூதியம் வழங்குவதோடு, நியாயவிலைக் கடைப் பணியாளா்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் , தனித்துறை என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நவ. 11- ஆம் தேதி முதல் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என,தமிழ்நாடு அரசு நியாயவிலை கடைப் பணியாளா் சங்கம் அறிவித்திருந்தது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இப்போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT