தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய  வலியுறுத்தல்

12th Nov 2019 09:14 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை புராதனவனேசுவரா் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனிடம் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் மா.கோவிந்தராசு அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்திருக்கோயில் திருஞானசம்பந்தா், சுந்தரா் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமாகும்.

இத்திருக்கோயிலில் கடந்த 2001- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

குடமுழுக்கு நடத்தப்பட்டு 18ஆண்டுகளான நிலையில், கோயில் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே

இத்திருக்கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பழைமைவாய்ந்த அம்மணிசத்திரம் சிவன் கோயிலுக்கும் திருக்குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

இக்கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்துள்ளாா் .

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT