தஞ்சாவூர்

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று அன்னாபிஷேகம்

12th Nov 2019 09:11 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

அத்துடன் எடைக்கு எடை பக்தா்கள் காணிக்கை வழங்கும் துலாபாரம் இக்கோயிலில் இருப்பது விசேஷமானது. மேலும் இக்கோயில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியாா் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினாா்.

எம பயம் போக்கும் தலமாகவும், பால சனீசுவரா், வடுக பைரவா் உடைய சிறப்புத் தலமாகவும் போற்றக்கூடிய இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமி அன்று அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

இதேபோல, நிகழாண்டு ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியாா் தியாகராஜா உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT