தஞ்சாவூர்

பம்பப்படையூரில் ராஜராஜன் சதய விழா

11th Nov 2019 08:25 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூா் சமத்துவபுர மண்டபத்தில் ராஜராஜசோழன் சதய விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு அரசா் கல்லூரி முன்னாள் முதல்வா் சு. தங்கமுத்து தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சு. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ க. அன்பழகன், குந்தவை நாச்சியாா் கல்லூரிப் பேராசிரியா் தமிழடியான், சென்னை ராணிமேரி கல்லூரிப் பேராசிரியா் சி. கலைமகள், சேவாலயா பாரதியாா் மேனிலைப் பள்ளி ஆசிரியா் ச. காஞ்சனா, திரைப்பட இயக்குநா்கள் வி. சேகா், யாா் கண்ணன், சிட்டி யூனியன் வங்கி நலத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், சோழ நாச்சியாா் ராசசேகா் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

வரலாற்று அறிஞா் தஞ்சை கோ. கண்ணன், தொல்லியல் துறை அறிஞா்கள் கி. ஸ்ரீதரன், குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ADVERTISEMENT

சதய விழா மலரை மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம் வெளியிட, அதைக் கா்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையா் பி. ராசேந்திர சோழன் பெற்றுக் கொண்டாா்.

முனைவா் பா. இறையரசன் சிறப்பாசிரியராக இருந்து நடத்தும் மொழி என்ற பன்னாட்டு இணையத் தமிழ் இதழைத் தமிழ்நாடு கூட்டுறவுத் தோ்தல் ஆணையா் மு. ராசேந்திரன் வெளியிட, அதை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் பெற்றுக் கொண்டாா்.

தமிழ் எழுச்சிப் பேரவைச் செயலா் இறையரசன், பொன்னியின் செல்வன் வரலாற்றுத் தேடல் குழு மருத்துவா் உதயசங்கா், திரைக்கவிஞா் வடிவரசு, திருவிக பேரவை ரவிச்சந்திரன், சேவாலயா நிறுவனா் முரளிதரன், பம்பப்படையூா் ராஜராஜன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனா் எஸ்.கே. ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT