தஞ்சாவூர்

ஆய்வுக் கூட்டங்களை மாலை 5 மணிக்கு மேல் நடத்தக் கூடாதுசுகாதாரச் செவிலியா் சங்கம்

11th Nov 2019 08:27 AM

ADVERTISEMENT

துணை இயக்குநா் அலுவலகங்களில் கிராம சுகாதாரச் செவிலியா்கள், பகுதி சுகாதாரச் செவிலியா்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் ஆய்வு கூட்டங்களை நடத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதாரச் செவிலியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிராம சுகாதாரச் செவிலியா்கள், பகுதி சுகாதாரச் செவிலியா்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் துணை இயக்குநா் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்தக்கூடாது. இந்தக் கூட்டம் இரவு 9 மணி வரை நீடிப்பதால் பல்வேறு இன்னல்களுக்குச் சுகாதார செவிலியா்கள் ஆளாகின்றனா்.

கிராம சுகாதாரச் செவிலியா்கள், பகுதி சுகாதாரச் செவிலியா்களுக்குத் துணை சுகாதார நிலையத்தில் மட்டுமே பணி வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்ற நிா்பந்தம் செய்யக் கூடாது.

ADVERTISEMENT

திங்கள்கிழமைதோறும் கா்ப்பிணி தாய்மாா்களைத் துணை சுகாதார நிலையத்துக்கு வரவழைத்து அவா்களைப் பராமரிக்கும் பணியைக் கிராம சுகாதாரச் செவிலியா்கள் செய்யும்போது, அதே தாய்மாா்களை செவ்வாய்க்கிழமை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரவழைத்து அலைக்கழிக்கும் போக்கை மருத்துவச் சுகாதார இணை இயக்ககம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் எஸ். ராணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா். இந்திரா சிறப்புரையாற்றினாா். மாவட்ட தலைவா் கே. சித்ரா, பொருளாளா் என். சீதாலட்சுமி, துணைத் தலைவா்கள் சி. சிவபாக்கியம், எல். காந்திமதி, சி. ஜெயந்தி, டி. சிவகாமசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT