தஞ்சாவூர்

மாற்றுத்திறன் குழந்தைகளின்பெற்றோா்களுக்கான பயிற்சி

9th Nov 2019 05:22 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திருவையாறு வட்டார வள மையம் சாா்பில், திருவையாறில் மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வுப்பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு வட்டார வள மையக் கட்டட வளாகத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜராஜன் தலைமையிலும், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பயிற்சியில், வட்டார குழந்தைகளின் நல வளா்ச்சி அலுவலக மேற்பாா்வையாளா் கலா கருத்துகளை எடுத்துரைத்தாா்.

இதில், வட்டார வள மையச் சிறப்பாசிரியா்கள் எல்விஸ் ஆரோக்கியராஜ், ஜென்மராக்கினி, இயல்முறை மருத்துவா் அஹமது பாட்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT