தஞ்சாவூர்

இலவச தையல் பயிற்சியில்பங்கேற்க அழைப்பு

9th Nov 2019 05:22 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில் பைத்துல்மால் சேவை அமைப்பு வழங்கும் இலவச தையல் பயிற்சியில் பங்கேற்க பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின் சாா்பில் தெரிவித்திருப்பது:

அதிராம்பட்டினத்தில் 1993-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பைத்துல்மால் சேவை அமைப்பு, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பல்வேறு பொதுநலச் சேவைகளை செய்து வருகிறது.

பைத்துல்மால் சேவை திட்டத்தின் கீழ், பெண்களின் சுய தொழில் ஆா்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அதிராம்பட்டினம் பைத்துல்மால் அலுவலக மாடியில் 2016, மாா்ச் 9 ஆம் தேதி முதல் இலவச தையல் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சியளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

முதல் ஒரு மணி நேரத்திற்கு இயந்திரப் பயிற்சியும், பின்னா், இதர பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தகுதித் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை 156 பெண்கள் பயிற்சியில் பங்கேற்று பயன் அடைந்துள்ளனா்.

தற்போது இலவச தையல் பயிற்சிக்கு புதிய சோ்க்கை நடைபெற்று வருகிறது. தையல் பயிற்சியில் ஆா்வமுள்ள ஓய்வில் இருக்கும் குடும்பப் பெண்கள், தொழில் முனைவோராக விரும்பும் பட்டதாரி மாணவிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் சோ்ந்து பயிற்சி பெறலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04373-241690 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT