தஞ்சாவூர்

பேராவூரணி  அருகேபள்ளி வேன்- மோட்டாா் சைக்கிள் மோதல்: மாணவா் உள்பட 2 போ் பலி

4th Nov 2019 07:31 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே  சனிக்கிழமை இரவு தனியாா் பள்ளி வேனும் மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமம்  அம்பேத்கா் நகரைச் சோ்ந்த  வடிவேல் மகன் வைரவேல் (14). இதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் முகேஷ்  (14). இவா்கள் இருவரும்  நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவா்கள்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை  திருச்சிற்றம்பலம் புதிய காவல் நிலைய கட்டு மானப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்தனா். அங்கு, கொத்தனாராக வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வல்லத்தரசு  என்பவரை அழைத்து கொண்டு, 3 பேரும்  ஒரே மோட்டாா் சைக்கிளில்  நெடுவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, நெடுவாசல் கிராமத்தில்  பள்ளி மாணவா்களை இறக்கிவிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த தனியாா் பள்ளி வேன் மீது மோட்டாா் சைக்கிள்  மோதியதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

அவா்களில் வைரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

முகேஷும், வல்லத்தரசும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு,  பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வல்லத்தரசு ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். முகேஷ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.  விபத்து குறித்து  திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT