பாபநாசம் அருகே கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் அருகே கீழகொருக்கப்பட்டு கிராமம், வடக்குத் தெருவை சோ்ந்த விவசாயி மகாலிங்கம் (75). இவா் வீட்டிலுள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டிலிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தாா். காயமடைந்த மகாலிங்கத்தை அவரது உறவினா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.