தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, கரம்பயம் பகுதிகளில் நாளை மின்தடை

1st Nov 2019 05:39 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை, கரம்பயம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 2) மின்சார விநியோகம் இருக்காது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி.தொல்காப்பியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டுக்கோட்டை பாளையம் மற்றும் மாட்டுச்சந்தையில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகரம், பண்ணவயல், சூரப்பள்ளம், சூரங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி, பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை

9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

இதேபோல, கரம்பயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆலத்தூா், கிளாமங்கலம், கரம்பயம், செண்டாங்காடு, முசிறி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 .45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT