சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

14 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது: ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டன

DIN | Published: 24th May 2019 05:45 AM


தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் அடங்கிய 14 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது சுற்றில் 42-வது வாக்கு சாவடியில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதில், பழுது ஏற்பட்டதால், எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், 43, 56, 91, 183-வது வாக்கு சாவடிகளில் பதிவான மின்னணு இயந்திரங்களும் பழுதாகின.  இதேபோல , தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 இயந்திரங்களும், ஒரத்தநாடு, திருவையாறு தொகுதிகளில் தலா ஒரு இயந்திரமும், மன்னார்குடி, தஞ்சாவூர் தொகுதிகளில் தலா இரு இயந்திரங்களும் பழுதாகிவிட்டன. எனவே, இவற்றுக்குப் பதிலாக தொடர்புடைய வாக்கு சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சுற்றுகள் முடிவில் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் தொடக்கம்
தஞ்சாவூரில் வழக்குரைஞா்கள் ஊா்வலம் - ஆா்ப்பாட்டம்