சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

மணல் கடத்தல்: லாரி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

DIN | Published: 24th May 2019 05:47 AM


தஞ்சாவூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, மோட்டார் சைக்கிளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் சுங்கான் திடலில் உள்ள ஆற்றங்கரையில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை நின்றன. இதில் 3 பேர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். மேலும், மோட்டார் சைக்கிளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்த கிழக்கு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்றனர். போலீஸார் வருவதை பார்த்த மூன்று பேரும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரசுப் பள்ளிகளில் கஜா புயலால் சேதமடைந்த குடிநீர், கழிப்பறை அமைப்புகளை சீரமைக்கும் பணி தொடக்கம் 
பேராவூரணி அரசுக் கல்லூரியில் காயகல்ப பயிற்சி வகுப்பு
சிலை திருட்டு வழக்கில் திருச்சி காவலர் கைது
சாஸ்த்ராவில் மேலாண்மைப் போட்டி: மதுரை கல்லூரி வெற்றி


பாபநாசம் அருகே 2 கூரை வீடுகள் தீக்கிரை