தஞ்சாவூரில் நாளை முதல்  நீச்சல் பயிற்சி

தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை (மே 2) முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை (மே 2) முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறுவர், சிறுமிகள், பொதுமக்களுக்கு "நீச்சல் கற்றுக் கொள்' பயிற்சி வகுப்புகள் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கட்டமும் 12 நாட்கள் நடைபெறும். 
முதல் கட்டமாக வியாழக்கிழமை முதல் மே 15-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 16 முதல் 29-ம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 30 முதல் ஜூன் 12-ம் தேதி வரையும், நான்காம் கட்டமாக ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,  7 மணி முதல் 8 மணி வரையிலும்,  மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் இரு பாலருக்கும் நடத்தப்படவுள்ளது.
இதில், 9 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோர் சேரலாம். தொடர்ந்து 12 நாட்களுக்கு மாவட்ட நீச்சல் பயிற்றுநரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்கான கட்டணம் ரூ. 1,500. இக்கட்டணத்தை நீச்சல் அலுவலகத்தில் உடன் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி வகுப்பு முடியும் நாளன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 04362 - 235633, 7401703496 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com