பட்டுக்கோட்டை வட்டம், பண்ணைவயல், கம்பையங்கன்னி வடக்குத்தெரு, ஆதிதிராவிடர் தெரு மற்றும் பட்டுக்கோட்டை ஆதித்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் கஜா புயலில் சேதமடைந்த தங்கள் வீடுகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வழங்காத வருவாய் துறையை கண்டித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனர், தலைவர் சதா.சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.