தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திலிருந்த 5 மியான்மர் அகதிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் ஹைதராபாத் வால்லாபூர் அகதிகள் முகாமிலிருந்து வந்திருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் (மியான்மர் அகதிகள்) 5 பேர் அங்குள்ள பள்ளிவாசல் வெளியே நின்றுகொண்டு, வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த அதிராம்பட்டினம் இஸ்லாமியர்களிடம் "நாங்கள் மீண்டும் எங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும்' என்று கூறி நன்கொடை வசூல் செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸார், அவர்கள் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் எப்.சையது காசீம் (39), ஏ. தில் முகமது (56), கே.முகமது சலீம் (40), நூர் ஆலம் (32), ஜியாவுல் ஹக் (14) என்பது தெரிய வந்தது.
ரோஹிங்கியா முஸ்லிம்களான இவர்கள் எப்படி ஹைதராபாத் வால்லாபூர் அகதிகள் முகாமிலிருந்து தப்பி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.