ஜூன் 28-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்குத் திறன் பயிலரங்கம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்காணல் ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் தெரிவித்திருப்பது:
இத்திறன் பயிலரங்கத்தில் கணினி, தையல் ஆகிய இலவச திறன் பயிற்சிகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு திறன் பயிற்றுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெறுவோருக்குப் பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றுகள் பயிற்சி நிறுவனங்களால் பெற்று வழங்கப்படும். 
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளி"நிகழ்ச்சியில் தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 
இப்பயிற்சி நேர்காணலில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளதால் வேலை நாடுநர்கள் தனியார் வேலைவாய்ப்புக்கும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால் பணி கோருவோருக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.  மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்,  வேலைவாய்ப்பு அடையாள அட்டையைப் புதுப்பித்து வருவோருக்கு அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பமும் இம்முகாமில் வழங்கப்படும். 
இவ்விண்ணப்பம் பெற பதிவுதாரர்கள் தங்களது அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, பள்ளி, கல்லூரி இறுதி மாற்று சான்று ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 40 வயதுக்குட்பட்ட விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் தங்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com