தஞ்சாவூர்

புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

31st Jul 2019 10:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன், புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்வியில் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து ஆண்டுக்கு, ஆண்டு மாற்றம் என்ற பெயரில் மாணவர்கள் அச்சத்திலிலேயே பள்ளி, கல்லூரிக்கு அண்மைக் காலமாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வை நடத்தவுள்ளது. இது சாமானிய மக்களுக்குக் கல்வி சென்றடையாமல் இடை நிறுத்தத்தில்தான் முடியும். 
தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டணக் கொள்ளையை அரசுத் தடுக்க முடியாமல் திணறுகிறது. இது ஆபத்தானது. எனவே, மாணவர்களைப் பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், மாணவர் அமைப்பு ஜீவா, தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலர் ப. அருண்சோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT