தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் ஓ.ஆர்.எஸ். தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் பங்கேற்று, வயிற்றுப்போக்கு மற்றும் ஓ.ஆர்.எஸ். தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவப் பிரிவுத் தலைவர் எஸ். ராஜசேகர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஏ. பாரதி, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலச் சங்கத் தலைவர் பி. செல்வகுமார், செயலர் எஸ். பழனிசாமி, பொருளாளர் சி.எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.