தஞ்சாவூர்

கும்பகோணம் மாவட்டம் என அச்சிடப்பட்ட மாதிரி அஞ்சல் உறை வெளியீடு

30th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில், கும்பகோணம் மாவட்டம் என அச்சிடப்பட்ட மாதிரி அஞ்சல் உறையை குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை வெளியிட்டனர்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், பாரம்பரிய, கலாச்சார, தொன்மைமிக்க கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கைக்கு, ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதியளித்தார். 
எனவே, பொதுமக்கள், தொழில், வணிக நிறுவனங்கள் அஞ்சல் உறைப் பயன்பாட்டில் கும்பகோணம் (தேர்வுநிலை) மாவட்டம் என குறிப்பிடப்பட்ட அஞ்சல் உறைகளில் கடிதங்கள் அனுப்புவது என முடிவு செய்துள்ளோம். 
கும்பகோணம் தனி மாவட்டமாக அமைய வேண்டும் என்பதே அஞ்சல் உறையில் கும்பகோணம் தேர்வுநிலை மாவட்டம் என பதிவிட்டுள்ளோம். 
இந்தப் பதிவு திறவுகோலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், கும்பகோணத்தில் இந்த மாதிரி அஞ்சல் உறையைக் கூட்டமைப்பின் தலைவர் சோழா சி. மகேந்திரன் வெளியிட, அதைச் செயலர் வி. சத்தியநாராயணன் பெற்றுக் கொண்டார். 
இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT