தஞ்சாவூர்

3 பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிப்பு

29th Jul 2019 10:45 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மூன்று இடங்களில் பெண்களிடம் சுமார் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள திருமலைசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஜான் பால் மனைவி பிரின்ஸ் (22). இவர் அப்பகுதியில் உள்ள தந்தை வீட்டுக்கு அண்மையில் சென்றார். 
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டின் பின்புறக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், தூங்கிக் கொண்டிருந்த பிரின்ஸ் கழுத்தில் இருந்த நான்கே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார். 
வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதேபோல, தஞ்சாவூர் விளார் சாலை பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி ஜோதி (62). இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் சென்றார். 
அப்போது, ஜோதி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை  மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பினார். தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
கும்பகோணம்:  மேலும், கும்பகோணம் கல்யாணராமன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி (54). இவர் வெள்ளிக்கிழமை இரவு சிற்றுண்டிச் சாலையில் உணவு வாங்கிக் கொண்டு மந்திரி சந்து பகுதியில் நடந்து வந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். 
கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT