தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மதுக்கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ. 1.81 லட்சம் கொள்ளை

29th Jul 2019 10:47 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி  ரூ. 1.81 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாபநாசம் அருகே இளங்கார்குடி கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் சிவராமன்(50), திருப்பாலைத்துறை அரசு மதுக்கடை மேற்பார்வையாளர். இவர் சனிக்கிழமை இரவு கடையில் வேலை முடிந்து  மது விற்ற பணம் ரூ. 1.83  லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் இளங்கார்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். 
படுகை புதுத்தெரு, அரசலாறு முனியாண்டவர் கோயில் அருகே சென்றபோது அவரை அடையாளம் தெரியாத மூவர் வழிமறித்து தாக்கி தலையில் வெட்டி ரூ. 1.83 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
படுகாயமடைந்த சிவராமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கபிஸ்தலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) ஜெயசீலன், ஆய்வாளர் நாகரெத்தினம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பாபநாசம் பகுதியில் அடிக்கடி நடைபெறும் இத்தகைய குற்றச்  சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT