தஞ்சாவூர்

பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

27th Jul 2019 09:06 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி (எல்போ பாக்ஸிங்) அண்மையில் நடைபெற்றது. 
போட்டியில்,  தஞ்சை, நாமக்கல்,  திருச்சி,  புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை மாவட்டம் முதலிடமும், திருச்சி மாவட்டம் இரண்டாம் இடமும், புதுகை மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றது. குத்துச் சண்டை விளையாட்டு தஞ்சை மாவட்ட செயலாளரும் தலைமை பயிற்சியாளருமான ஷேக் அப்துல்லாஹ் மற்றும் மாநிலச் செயலாளர் டி. கந்தமூர்த்தி, பள்ளி தாளாளர் ஆர்.சந்திரசேகரன், பள்ளி முதல்வர் பி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பேசினார். போட்டியில் மாநில நடுவர்களாக பூபாலன், சரவணன், சரண்யா, பிரசன்னா, ஆர்த்தி, மணிகண்டன், போத்தீஸ், அரவிந்த், அண்ணாதுரை, லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை நடத்தினர். 
சிறந்த பதக்க   பட்டியலில் உடையநாடு-வீரியன்கோட்டை ராஜராஜன் பள்ளி முதலிடம் பிடித்தது. இப்பள்ளியின் மாணவர்கள் 10 தங்கம், 17 வெள்ளி, 18 வெள்ளி பதக்கங்களை வென்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT