தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள சபையர் மஹாலில் உத்தரப் பிரதேச மாநில கைவினை மற்றும் சிற்பக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் கலாஞ்சலி என்கிற அகில இந்திய கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கலாஞ்சலி மேலாளர் ஆர். துபேல் மேலும் தெரிவித்திருப்பது: இக்கண்காட்சி ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக. 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், சாஹரன்பூர் தேக்கு மர வேலைப்பாடுகளான வீட்டு உபயோகப் பொருட்கள், மொரதாபாத் பித்தளைப் பொருட்கள், சிற்பங்கள், ஜெய்ப்பூர் லாக் வளையங்கள், சில்க் பெயிண்டிங்ஸ், குஷின் கவர்ஸ், பிளாக் மெட்டல், மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், பெண்களுக்கான நூறு சதவீத காட்டன் சுடிதார்கள், சேலைகள், பீங்கான் பொருட்கள், நவதானிய சுவாமி சிலைகள், தோல் பைகள், காலணிகள், ஹைதராபாத் முத்து, பவளம் ராசிக் கற்கள், ஐம்பொன் ஆபரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு சிறப்புச் சலுகையாக 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது.