தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதியில் வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஆய்வு

22nd Jul 2019 09:44 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை பகுதியில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் (ஆராய்ச்சி) எம்.சுப்பையா சனிக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, தென்னை வாழ்வாதார தொகுப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நெட்டை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. அவற்றின் நடவுப் பணிகள் முறையாக நடந்துள்ளதா என்பதை  கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடைபெற்றது. 
இதற்காக, நாட்டுச்சாலை கிராமத்தில் விவசாயி பன்னீர் என்பவர் தென்னந்தோப்பில் நெட்டை கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை கூடுதல் இயக்குநர் எம்.சுப்பையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதுதவிர,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி தென்னை விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதமும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்த கூடுதல் இயக்குநர், விரைவில் இத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது,  தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர்(மா.தி) அ.ஜஸ்டின், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி மையம்) ஆர்.மதியரசன், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) எஸ்.சங்கீதா, வேளாண்மை அலுவலர் டி.சுதா, வேளாண்மை உதவி அலுவலர் எஸ்.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT