தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சிவாஜிகணேசன் நினைவு நாள் நிகழ்ச்சி

22nd Jul 2019 09:43 AM

ADVERTISEMENT

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்ட சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவாஜிகணேசன் சிலைக்கு பேரவையின் மாவட்டத் தலைவர் சதா. வெங்கட்ராமன் தலைமையில் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோ.அன்பரசன், சிவாஜி மன்ற நிர்வாகிகள் ஆர்.கே. பாஸ்கர், வல்லுண்டாம்பட்டு கணேசன், வெங்கடசாமி, செந்தில் நா. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT