தஞ்சாவூர்

குருங்குளம் ஊராட்சியைத் தத்தெடுத்த தன்னார்வ அமைப்பு

22nd Jul 2019 09:43 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் கிழக்கு ஊராட்சியைத் தன்னார்வ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை தத்தெடுத்தனர். 
இக்கிராமத்தில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாத்தல், கிராமம் முழுவதும் தூய்மையைக் கடைப்பிடித்தல், அனைவரது சுகாதாரத்தையும் பேணிகாத்தல் ஆகியவற்றுக்காக தஞ்சாவூர் மாசில்லா இயக்கம்,  தனியார் மருத்துவமனை கனெக்ட் தன்னார்வ இயக்கம் ஆகியவை பூர்ணசக்தி என்ற திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு குருங்குளம் கிழக்கு ஊராட்சியைத் தத்தெடுத்துள்ளன.
இதன் தொடக்கமாக குருங்குளத்தில் உள்ள பிள்ளையார் குளம் ஞாயிற்றுக்கிழமை தூர் வாரப்பட்டது. மேலும், பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்களுக்குப் பொது மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதன்மூலம், ஏறத்தாழ 300 பேர் பயனடைந்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துகிருஷ்ணன், மருத்துவர் ராதிகா மைக்கேல்,  கனெக்ட் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் சுதாமணி, ராஜாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இக்கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு மருத்துவ முகாம், காய்கறி தோட்டம், குறுங்காடு வளர்த்தல், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு முறையை ஏற்படுத்துதல், கிராமத்தில் உள்ளவர்களுக்குச் சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது என தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT