தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு வரையிலும் நீடித்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 45.4, தஞ்சாவூர் 42, பூதலூர் 29.4, திருவையாறு 24, கும்பகோணம் 22, பாபநாசம் 20, அய்யம்பேட்டை 17, திருக்காட்டுப்பள்ளி 16.6, மஞ்சலாறு 14.4, திருவிடைமருதூர் 12, வல்லம் 11, கல்லணை 1. இதேபோல, திங்கள்கிழமை மாலையும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் மூலம் வெப்பம் தணிந்து, குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.