தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காமராஜர் பிறந்த நாள் விழா

16th Jul 2019 09:14 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். 
இதில், காமராஜர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  இவ்விழாவில் முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், மாவட்டப் பொருளாளர் ஆர். பழனியப்பன், பொதுக் குழு உறுப்பினர் ஏ. ஜேம்ஸ், நிர்வாகிகள் கோவி. மோகன், எஸ்.ஆர். வாசு, கதர் வெங்கடேசன், காலித் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
பின்னர், பழைய பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. 
கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணைத் தலைவர் கோ. அன்பரசன், பொதுக் குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர். கோவிந்தராஜூ, பொருளாளர் வயலூர் எஸ். ராமநாதன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கோ. ராகவேந்திரதாசன், பொதுச் செயலர் மோகன்ராஜ், செந்தில் நா. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT