தஞ்சாவூர்

சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

16th Jul 2019 09:16 AM

ADVERTISEMENT

இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் சிவசேனா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்து மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி போஸ் பேசினார். 
மாநில அமைப்பாளர் தங்கமுத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர் வேலு, நாம் இந்துக்கள் கட்சி நிறுவன தலைவர் கணேஷ்பாபு, இந்து இளைஞர் எழுச்சி பேரவைத் தலைவர் பழ. சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT