தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் ஜூலை 16 மின்தடை

15th Jul 2019 08:43 AM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக,  தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஜோ. சுகுமார் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் , ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, சிவாஜி நகர், சீனிவாசபுரம், வண்டிகாரத் தெரு, நாகை சாலை, மகர்நோன்புச்சாவடி, எஸ்.எம். சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், பூக்காரத் தெரு, அன்பு நகர், கோரிகுளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT