தஞ்சாவூர்

ஹைட்ரோகார்பன் திட்டப் பாதிப்பு: மக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்த முடிவு

4th Jul 2019 09:10 AM

ADVERTISEMENT

ஹைட்ரோகார்பன்  திட்டத்தின் பாதிப்பு குறித்து கிராமங்கள்தோறும் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று பேராவூரணி, சேதுபாவசத்திரம் ஒன்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, ஜூலை 9 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறஉள்ள பேரணித் தொடர்பாக, பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சிங்காரம் தலைமை வகித்தார்.  பேரூராட்சி முன்னாள்  தலைவர் என். அசோக்குமார், தமிழக மக்கள் புரட்சி கழக மாநிலத் தலைவர் அரங்க.குணசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பா.பாலசுந்தரம்  முன்னிலை வகித்தனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில், ஜூலை 9- இல் நடைபெற உள்ள  விவசாயிகளின் பெருந்திரள் பேரணியில் பேராவூரணி வட்டத்திலிருந்து அதிகளவில் பங்கேற்பது,  கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அனைத்து  உறுப்பினர்களையும் சந்திப்பது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.திருநாவுக்கரசு,  திமுக பொறுப்பாளர்கள் கோ.நீலகண்டன், அ.அப்துல் மஜீத், மதிமுக ஒன்றியச் செயலர்  வ.பாலசுப்பிரமணியம்  , மக்கள் அதிகாரம் அமைப்பின் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாணிக்கம், மனிதநேய ஜனநாயகக் கட்சி எஸ் .அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், அறநெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகம் ஆறு. நீலகண்டன், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் உள்ளிட்டோர்  கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT