தஞ்சாவூர்

கார் மோதி விவசாயி பலி

4th Jul 2019 09:10 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதன்கிழமை கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
செங்கிப்பட்டி அருகிலுள்ள மனையேறிப்பட்டி உடையார் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராமு (61). இவர் புதன்கிழமை காலை  மனையேறிப்பட்டி திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர் மீது மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ராமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT