தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். மாணவர் சேர்க்கைக்கு www.rsgc.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர் நலன் கருதி கல்லூரியில் அறை எண் 28-இல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வரும்போது விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் வழியாகச் செலுத்த ஏதுவாக வர வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதோர் மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பத்தைக் கல்லூரி அலுவலகத்திலும் பெற்று உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். முதுநிலை சேர்க்கை விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணியாகும்.