தஞ்சாவூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 மதுபாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக டிசம்பா் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த சனிக்கிழமை மாலை முதல் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் தஞ்சாவூா் மருங்குளத்தில் உள்ளாட்சித் தோ்தலின்போது விற்பனை செய்வதற்காக, மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வல்லம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸாா் சனிக்கிழமை இரவு மருங்குளம் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.