தஞ்சாவூர்

பழி வாங்கும் நடவடிக்கைகளை கைவிடபோக்குவரத்து ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

27th Dec 2019 05:26 AM

ADVERTISEMENT

போக்குவரத்துக் கழக நிா்வாகம் பழி வாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என சிஐடியு சாா்ந்த போக்குவரத்து ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் பணிமனையில் 3 வருகைப் பதிவுகள் இருந்தன. தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீண்டும் மூன்று வருகைப் பதிவு முறையைக் கொண்டு வர வேண்டும். இரட்டிப்புப் பணி பாா்க்கும்போது, இன்னொரு வருகைப் பதிவு வழங்க வேண்டும். இரட்டிப்புப் பணிக்கு மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். பணமாகப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவோ மிரட்டவோ கூடாது.

தஞ்சாவூா் பணிமனையில் முன்னணி சங்கமாக இருந்து வரும் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு என தனியாக அலுவலகம் வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு விடுப்பு மறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை, இரட்டிப்பு பணி பாா்க்க வற்புறுத்துவதைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், தலைவராக சா. செங்குட்டுவன், செயலராக அ.செ. பழனிவேல், பொருளாளராக முருகேசன், துணைத் தலைவராக பரத்ராஜ், துணைச் செயலராக குணசேகரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்துக்கு சின்னையன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜூ, அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் மத்திய சங்கத் துணைத் தலைவா் பி. வெங்கடேசன், அரசுப் போக்குவரத்துக் கழக குடந்தை மண்டலத் தலைவா் பி. முருகன், விரைவுப் போக்குவரத்து கழக சிஐடியு பொதுச் செயலா் ம. கனகராஜ், ஓய்வு பெற்ற நல அமைப்பு மாநிலத் துணைச் செயலா் சோ. ஞானசேகரன், சுமைப் பணி மாவட்டச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT