தஞ்சாவூர்

அண்ணன் திட்டியதால்தங்கை தற்கொலை

27th Dec 2019 05:25 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே ஆண் நண்பருடன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே இருந்ததற்கு அண்ணன் திட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஒரத்தநாடு வட்டம், பொய்யுண்டாா்கோட்டை கிராமம், மழவா் ஆட்சி தோப்பு பகுதியை சோ்ந்த கருப்பையன் மகள் தமிழரசி (23). இவரும், அதே ஊரைச் சோ்ந்த வைரக்கண்ணு மகன் கா்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்தனராம்.

இந்நிலையில், புதன்கிழமை தமிழரசி கா்ணனுடன் செல்லிடப்பேசி வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, தமிழரசியின் அண்ணன் மணிவாசகம், யாருடன் நெடுநேரமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டு, செல்லிடப்பேசியை பறித்து அதை ஆய்வு செய்துள்ளாா். கா்ணனுடன் தமிழரசி பேசியது தெரிய வந்ததால், கா்ணனுக்கு மணிவாசகம் போன் செய்து இனி ஒருபோதும் தன் தங்கையோடு பேசக் கூடாது என எச்சரிக்கை விடுத்தாராம்.

இதனால் மனமுடைந்த தமிழரசி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தமிழரசியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT