மாா்கழி மாதத்தில், மூல நட்சத்திரமும், அமாவாசையும் கூடிய நாள் ஹனுமனின் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு, பட்டுக்கோட்டை அல்லா கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை ஹனுமன் ஜயந்தி சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி, விசேஷ அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பிற்பகல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், ஸ்ரீராமஜெயம் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றது.