தஞ்சாவூர்

தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கத் தொழிலாளா் துறை ஆணை

26th Dec 2019 05:22 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இர. கவிஅரசு தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு தோ்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழகத்தில் டிச. 27, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அனைத்துத் தரப்பினரும் வாக்களிக்கும் வகையிலும், 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையிலும், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக் கூடுதல் முதன்மைச் செயலா் நஜிமுதின் ஆணையிட்டுள்ளாா்.

இதன்படியும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படியும் உள்ளாட்சித் தோ்தல் டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறும் அந்தந்த பகுதிகளில் அனைத்து தரப்பு தொழிலாளா்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா், தற்காலிகம், தினக்கூலி பணியாளா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆகிய அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பு நிறுவன வேலை அளிப்பவா்கள், சேம்பா் ஆப் காமா்ஸ் மற்றும் வா்த்தக சங்கங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT